மே முதலாம் திகதிக்குள் தீர்வு இல்லையேல் பதவி துறப்பேன் – வடிவேல் சுரேஷ் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வேன் – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று கூறியவை வருமாறு,

“ பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை சம்பந்தமாக பல சுற்றுவட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையிலே முதலாளிமார் சம்மேளனம் ஒரு ஒருமைப்பாட்டிற்கு வராததன் காரணமாக நாங்கள் சம்பள நிர்ணய சபையின் மூலமாக எமது பாட்டாளி மக்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு முயற்சித்தோம்.
கடந்த 10 ம் திகதி இடம்பெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் அதனை புறக்கணித்ததையிட்டு எங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்தோம்.

நாங்கள் எதிர்ப்பார்த்தோம் இன்று 24 ம் திகதி நடைபெறுகின்ற இந்த சம்பள நிர்ணய சபைக்கு பொறுப்புடன் இந்த முதலாளிமார் சம்மேளனம் கலந்து கொள்ளும் என எதிர்பார்த்தோம்.

ஆனால் இன்றும் அதை புறக்கணித்து உள்ளனர். இது சம்பந்தமாக தற்போது நான் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தேன். தொடர்ந்தும் நான் நினைக்கின்றேன் இந்த பாராளுமன்ற பதவியோ எந்த பட்ட பதவியோ வைத்துக் கொண்டு இந்த மக்களுடன் இணைந்து அவர்களுடைய ஒருமைக்காக போராடுவது ஒரு சிறந்த விடயமாக எனக்கு தெரியவில்லை.

எதிர்வரும் முதலாம் திகதி மே தினம் தொழிலாளர் தினம் இந்த தொழிலாளர் தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழிலாளர் தினம் அன்று சிக்காக்கோ நகரிலே 8 மணித்தியால வேலையை கட்டாயப்படுத்தி தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி போராடியதன் பயனாக தான் இன்று நாடு முழுவதும் உலகம் முழுவதும் மே தினம் கொண்டாடப்படுகின்றது.

ஆகவே மேதினத்திற்கு முன்பாக இதற்கு சரியான தீர்வு கிட்டா விட்டால் அதாவது தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாய்க்கும் மேலாக கொடுப்பனவை வழங்காத பட்சத்திலே எங்களுக்கு இன்னும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. நான் மே மாதம் 2 ம் திகதி ஆகும் போது எனது அனைத்து பதவிகளில் இருந்தும் நான் ராஜினாமா செய்து என்னுடைய தொப்புள் கொடி உறவுகளுடன் தோளோடு தோள் நின்று தோட்டம் தோட்டமாக என்னுடைய மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் மாவட்டம் மாவட்டமாக இறங்கி முழுமையாக என்னை அர்ப்பணித்து தொழிற்சங்க போராட்டத்தில் என்னுடைய தொப்புள் கொடி உறவுகளின் உரிமைக்காக போராடுவதற்கு தீர்மானித்துள்ளேன்.” – எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

ராமு தனராஜா

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles