மே 29 வரை எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது: லிட்ரோ

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) வரை எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முற்பதிவு செய்யப்பட்டுள்ள எரிவாயு அடங்கிய கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவன தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

இதனடிப்படையில், திங்கட்கிழமை முதல் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றுடன் 5 நாட்களாக வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை.

மாற்று வழியாக, மண்ணெண்ணெய் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் தற்போது பொதுமக்களுக்கு இல்லாமல் போயுள்ளது.

எரிவாயுவினை பெறுவதற்கான வரிசைகளைப் போன்று மண்ணெண்ணெய்க்காகவும் மக்கள் தொடர்ந்தும் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles