ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஜே.வி.பியும் இணைந்து கூட்டணியொன்றை உருவாக்கலாம். இதற்கு எவ்வித தடையும் கிடையாது. இதற்கு முன்னரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது தற்போது தூய்மையான அரசியல் கட்சியாக உள்ளது. மோசடியாளர்கள் வெளியேறிவிட்டனர். அதேபோல ஜே.வி.பியும் தூய்மையான கட்சி. இதற்கு முன்னரும் கூட்டண அமைத்துள்ளோம். எனவே, இணைந்து செயற்படுவதில் சிக்கல் வராது எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, இடதுசாரி சக்திகள் ஓரணியில் திரளவேண்டும் எனவும் தயாசிறி அழைப்பு விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நாட்டை கட்யெழுப்ப முன்வருமாறு அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே, சுதந்திரக்கட்சி தரப்பில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.