மைத்திரி – சஜித் அவசர சந்திப்பு! விமல் அணியும், இ.தொ.காவும் பங்கேற்பு!!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள மைத்திரிபால சிறிசேனவின் வதிவிடத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் 11 கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் இ.தொ.காவின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

 

Related Articles

Latest Articles