மொட்டு கட்சியின் எதிர்பார்ப்பை ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார் – நாமல்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்பார்த்ததை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றியுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

” ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசியல், பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முடியும் என நம்பினோம். எமது எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டங்களைக்கூட கட்டுப்படுத்தினார்.

நாம் கட்சி கொள்கைகளை பாதுகாக்க வேண்டும். இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை, விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக விற்கப்படக்கூடாது. முதலீடுகளை உள்ளீர்க்கலாம்.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles