கடந்த பொதுத்தேர்தலில் மாவட்டத்தில் அதிக வாக்குகளைப்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன என்று தெரியவருகின்றது.
மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப்பெற்ற ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காவது, அமைச்சு பதவி வழங்குமாறு மொட்டு கட்சி தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே பதவிகள் வழங்கப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது.
இதன்படி ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, எஸ்.எம். சந்திரசேன, சி.பி. ரத்னாயக்க, ரோஹித அபேகுணவர்தன, விமலவீர திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.










