உரிய நேரத்திலேயே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படுவார் – என்று மொட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தில் நிச்சயம் மாற்றம் வரும், எந்நாளும் எம்மால் அப்பதவியில் இருக்க முடியாது. புதியவர்கள் மற்றும் இளைஞர்கள் தலைமையேற்க முன்வர வேண்டும்.
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. உரிய நேரத்தில் அறிவிப்பு விடுக்கப்படும்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியம்கூறுவதுபோல்தான் செயற்பட வேண்டும் என்றில்லை, மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.” – எனவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.
