‘மொட்டு கட்சியின் பயணத்தை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது’

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று 7 ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ளது.

இதனைமுன்னிட்டு மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” கட்சிக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன, சேறுபூசப்படுகின்றது. எனினும், சக்திமிக்க எமது பயணத்தை தடுக்க முடியாது. மக்களின் கனவை நிச்சயம் நிறைவேற்றுவோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles