மொட்டு கட்சியின் மூன்று பட்ஜட்கள் தோற்கடிப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளுகையின்கீழுள்ள மூன்று உள்ளாட்சி சபைகளின் வரவு – செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை நகரசபை, ஜா- எல பிரதேச சபை, மற்றும் ஹல்துமுல்ல பிரதேச சபை ஆகியவற்றின் ‘பட்ஜட்’களே இவ்வாறு தோற்கடிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை நகரசபையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் 9 பேரும் , ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் நால்வரும், சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மூவரும், ஜே.வி.பியின் உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் அங்கம் வகிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சபையின் ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அறுவர் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் மூவர் ஆதரவாக வாக்களித்தபோதிலும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்ததால் பாதீடு தோல்விகண்டது. ஆதரவாக 6 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 47 உறுப்பினர்களைக்கொண்ட ஜா- எல பிரதேச சபையின் ஆட்சி அதிகாரமும் மொட்டு கட்சியின்கீழ்தான் இருக்கின்றது. மொட்டு கட்சி உறுப்பினர்கள் 23 பேரில் நால்வர் எதிராக வாக்களித்ததால் பட்ஜட் தோல்விகண்டது. பட்ஜட்டுக்கு ஆதரவாக 18 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதேபோல  ஹல்துமுல்ல பிரதேச சபையின் பட்ஜட்டும் தோல்வியடைந்துள்ளது. ஆதரவாக மூவர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

Related Articles

Latest Articles