பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும். எனவே, அந்த வெற்றியில் மலையக மக்களும் பங்காளிகளாகவேண்டும் – என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மொட்டு சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் முத்தையா பிரபுவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
” மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படவேண்டிய பல வேலைத்திட்டங்கள் உள்ளன. அவற்றை செய்வதற்காகவே முத்தையா பிரபு அரசியலுக்கு வந்துள்ளார். எனவே, அவருக்கும் ஒரு வாய்ப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தேர்தலில் மொட்டுதான் வெற்றிபெறும். எனவே, நாம் வெற்றியின் பங்காளிகளாகி அபிவிருத்தியை நோக்கி பயணிக்கவேண்டும்.” – என்றும் முரளி கூறினார்.