” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்பது பீனிக்ஸ் பறவை போன்றது. எம்மை அழிக்க முடியாது. அழித்தாலும் மீண்டெழுவோம். இதனை மே தின கூட்டத்தில் நிரூபித்தோம்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், காலி முகத்திடல் போராட்டக்காரர்களை காடையர்கள் எனவும் அவர் விமர்சித்தார்.
