ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவும், குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மைனாகோகம மற்றும் கோட்டாகோகம போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மைனாகோகம மற்றும் கோட்டாகோகம மீதான தாக்குதல் தொடர்பில், சனத் நிஷாநத எம்.பி., முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
