” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற (காகம்) ‘கூடு’தான் தம்மை பாதுகாத்தது என்பதை இன்று குயில்கள்போல் சுதந்திரமாக செயற்படுபவர்கள் மறந்துவிட்டனர்.
முட்டையிடுவதற்கு மீண்டும் காகத்தின் கூட்டுக்குதான் வரவேண்டும் என்பதை இந்த குயில் குஞ்சுகள் மறந்துவிடக்கூடாது.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார இன்று தெரிவித்தார்.
அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கும் தமது கட்சி (சில) எம்.பிக்களையும், மொட்டு கூட்டணியில் இருந்து வெளியேறிய பங்காளிகளையும் இலக்கு வைத்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.










