மொட்டு கட்சி செயலாளரை நீக்குமாறு தீர்மானம் நிறைவேற்றம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்தை நீக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாத்தறை மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி புதிய பொதுச்செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட வேண்டும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தறை மாவட்ட கூட்டம் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் கட்சி எடுத்துள்ள முடிவு மீளப்பெறப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles