கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதை நிறுத்துமாறு ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.
நள்ளிரவு 12.06 மணியளவில் இரகசியமான முறையில் அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திற்கு யுகதனவி மின் உற்பத்தி நிலையம் வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனினும், மின் உற்பத்தி நிலையம் விற்கப்படவில்லை எனவும், முதலீட்டுக்கான வாய்ப்பே வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், ஆளுங் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.