மொனராகலை, உனகந்த வனப் பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 2,100 கஞ்சா செடிகள் சுற்றிவளைப்பின்போது மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவம் வழங்கிய தகவலின்படி, இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மொனராகலை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (19) இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சுமார் 3 அடி உயரம் கொண்ட 2,100 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.










