” யாசகம்பெற சிறுவர்களை பயன்படுத்தினால் உடன் பொலிஸாருக்கு அறிவிக்கவும்”

யாசகம் கேட்பதற்காக சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டால் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும்சிறுவர் யாசகம் பெறும் சம்பவங்கள் வழமையாக பதிவாகி வருவதாகத் தெரிவித்த அவர், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் யாசகம் எடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles