யாழில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருள் ஏற்றிய நால்வர் கைது!

யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்து எடுத்துக் கொண்டிருந்த நால்வர், இரு கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவருக்கு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற பிடி விறாந்து ஐந்து காணப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர்கள், தாங்கள் எழுது மட்டும் வாழ் பகுதியில் போதைப் பொருளை பெற்றுக் கொள்வதாகவும் பளைப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் குறித்த போதை பொருளை பெற்றுக் கொள்வதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

கை செய்யப்பட்ட நபர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Latest Articles