யாழில் காய்ச்சலால் குடும்பஸ்தர் மரணம்

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சாவடைந்தார்.

இவர் நான்கு தினங்களாகக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரை நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

Related Articles

Latest Articles