யாழ்ப்பாணம், ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் எனக்கூறி வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் மன்னார் பகுதியில் பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியதாக கூறப்படும் நிலையில், இன்று காலை யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போனியா கல்லூரி வீதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசத்தில் பாடசாலை சென்ற மாணவி ஒருவரை, நபரொருவரை நீண்ட நேரமாக அவதானித்து கொண்டிருந்துள்ளார்.
இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை பிடித்து விசாரித்த போது அவரது பதில் சந்தேகத்துக்கிடமாக இருந்ததினால் அவரை மடக்கி பிடித்து அவரை நன்றாக கவனித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்,
