யாழில் விபத்து – 22 வயது இளைஞன் பலி!

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, அராலி செட்டியார்மடம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த மற்றைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்தில் உடையார் கட்டு – விசுவமடு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டு, வட்டு மேற்கு – வட்டுக்கோட்டை பகுதியில் வசித்துவந்த கந்தசாமி நிரோஜன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கட்டுப்படுத்த முடியாத அதிவேகம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .

Related Articles

Latest Articles