யாழில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐவர் மடக்கி பிடிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் மொத்த பெறுமதி 80 இலட்சம் ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles