இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சுங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான வழிகளை ஆராய்வதற்கும், மாற்றங்களுக்காக கதைப்பவர்களை சந்திக்கவும் மற்றும் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அனைத்து இலங்கையர்களையும் உள்ளடங்கிய நிர்வாகத்திற்கான தங்களின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும் யாழ்ப்பாணத்திற்கான இந்தப் பயணம் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்ட தூதுவர், அதன்பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரையும் தூதுவர் இன்று சந்திக்கவுள்ளார்.