யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான காணிக்குள் துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு!

 

யாழ். மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் நேற்று ரி56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, அவதானித்தனர்.

ரவைகளை மீட்பதற்குரிய மனுவை ஊர்காவற்றுறை பொலிஸார், ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர் காவற்றுறை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Articles

Latest Articles