உத்தேச ‘யுகதனவி’ உடன்படிக்கை அடுத்த வாரம் சபையில் சமர்ப்பிக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காரால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,” உத்தேச உடன்படிக்கையின் பிரகாரம் எல்என்ஜி விநியோகத்துக்கான நிறைவேற்று அதிகாரம் எந்தவொரு நிறுவனத்துக்கும் வழங்கப்படமாட்டாது.
அதேபோல மன்னாரில் மேற்கொள்ளப்படவுள்ள எரிவாயு தொடர்பான ஆய்வுகளிலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அதிகாரம் செலுத்த முடியாது. வெளிநாட்டு முதலீடுகளை அரசு கொண்டுவருகின்றதேதவிர, தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவில்லை.
உத்தேச யுகதனவி ஒப்பந்தம் அடுத்த வாரமளவில் சமர்ப்பிக்கப்படும்.” – என்றார்.