ரஞ்சன் விடுதலை!

சிறைதண்டனை அனுபவித்துவரும் நடிகர் ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான அனைத்து ஆவணங்களும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக்கோரி கடிதம் கையளித்துள்ளார். இதனையடுத்தே அவர் அடுத்த வாரம் விடுவிக்கப்படவுள்ளார்.

Related Articles

Latest Articles