ரணகளத்திலும் கிளுகிளுப்பு- நோர்வூட்டில் 11 பேர் அதிரடியாகக் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி கால்ப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் போட்ரி மைதானத்தில் வைத்தே இவர்கள் இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி மைதானத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி  அயரபி மற்றும் போட்ரி தோட்டங்களைச் சேர்ந்த   சுமார் 40 இற்கும் மேற்பட்டவர்கள் கால்பந்தாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்தே மைதானம் சுற்றிவளைக்கப்பட்டது.  பொலிஸாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தம்பியோடியுள்ளனர். போட்டியை ஏற்பாடு செய்தவர்களும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

இதே வேளை கைது செய்யப்பட்டவர்கள் நாளை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கே. சுந்தரலிங்கம்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles