நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான ஆவணத்தை, விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் சி.வி விக்னேஸ்வரன் தமது ஆதரவினை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கியிருந்தார்.
இதனடிப்படையில், ஜனாதிபதியை விரைவில் சந்தித்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து அவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கோரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.










