தனது ஆட்சியின்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்கள் சிலரை ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார் என தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஓரங்கமாக இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, காஞ்சன விஜேசேகர ஆகியோர் ரணிலின் அழைப்பு தொடர்பில் சாதகமாக பரிசிலீத்துவருகின்றனர் எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை சிலிண்டர் கூட்டணிக்கு கிடைக்கப்பெற்றுள்ள இரு தேசிய பட்டியல்களில் ஒன்றை முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், மற்றுமொன்றை ஐதேக உறுப்பினர் ஒருவருக்கும் வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
