ரணிலின் ஆட்டம் ஆரம்பம் – முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களின் பதவிகள் பறிபோகும் அபாயம்!!

தமிழ் முற்போக்கு கூட்டணியின்  உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிபோயும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சி சபைத்தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தின்கீழ் தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டது.

குறிப்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்கள் யானை சின்னத்தின்கீழ் களமிறங்கி வெற்றிபெற்றவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் விரைவில் அந்த பக்கமா, இந்த பக்கமா என முடிவொன்றை எடுக்காவிட்டால் பதவிகள் பறிக்கப்படும் என கட்சியின் உயர்பீடம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் முரண்பாடு அதிகரித்து, அக்கட்சிக்கு சார்பானவர்களை ஐ.தே.க. நீக்கும் பட்சத்தில், யானை சின்னத்தின்கீழ் போட்டியிட்ட முற்போக்கு கூட்டணிக்கும் நெருக்கடி ஏற்படும் என கூறப்படுகின்றது.

அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான பங்காளிக்கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி, கொழும்பிலும், கண்டி மாவட்டத்திலும் சொந்த சின்னத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. எனவே, அக்கட்சி உறுப்பினர்களுக்கு சிக்கல் ஏற்படாது. திகா கட்சி உறுப்பினர்களுக்கே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles