ரணிலின் கோரிக்கையை நிராகரித்த அரசு!

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைதொடர்பாக ஆராய்வதற்கு எதிர்வரும் திங்கட்கிழமையும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வினபோதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதும் ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

ரணிலின் இந்த யோசனைக்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஆதரவை வெளியிட்டது. எனினும் .அதனை ஏற்பதற்கு சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன மறுத்துவிட்டார்.

Related Articles

Latest Articles