ரணிலுக்கு நேசக்கரம் நீட்ட அநுர யாப்பா தலைமையில் புதிய கூட்டணி?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து புதியதொரு அரசியல் கூட்டணியை கட்டியெழுப்புவதற்கான முயற்சி இடம்பெற்றுவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இந்த அணியின் தலைமைப்பதவி முன்னாள் அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பாவுக்கு வழங்கப்படவுள்ளது என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவே இதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் எனவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்த கூட்டணி உருவாகவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

அநுர யாப்பா அணியில் தற்போது எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்வரை அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதிக்கு தற்போது ஆதரவு வழங்கும் மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலரும் இந்த கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக இன்னும் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles