பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும் – என்று கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில், நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மொட்டு கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தெரியவருகின்றது.










