ரணில், சஜித் இணைந்தாலும் அரசுக்கு சவால் இல்லை!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்து களமிறங்கினால்கூட ஆளுங்கட்சிக்கு சவால் இல்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை சங்கமிக்க வைப்பதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்காக செயற்பட்டுவருகின்றது. மக்களின் தேவைகளே நிறைவேற்றப்பட்டுவருகின்றன. எனவே, அவர்கள் இணைந்தால்கூட அரசின் பயணத்துக்கு தாக்கமாக அமையப்போவதில்லை.

உள்ளாட்சிசபைத் தேர்தலை இலக்கு வைத்து க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவில்லை. தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உள்ளாட்சிசபைத் தேர்தலை தேசிய தேர்தல் ஆணைக்குழு நடத்தும்.” – என்றார்.

Related Articles

Latest Articles