ரணில், சஜித் சங்கமத்தால் அச்சத்தில் அரசு: ஹர்சன ராஜகருண எம்.பி.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைவு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அச்சத்தில் உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி போன்ற வலதுசாரிகள் பிளவடைந்து இருந்ததால்தான் ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றார்.

எனவே, இந்த இரு தரப்பின் இணைவென்பது அரசாங்கத்துக்கு நல்ல செய்தியாக இருக்காது. நிச்சயம் இது தொடர்பில் தேசிய மக்கள் சக்திக்கு அச்சம் ஏற்பட்டிருக்கும்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைவதால் சஜித் பிரேமதாசவின் தலைமைப்பதவிக்கு பாதிப்பு ஏற்படாது.” – என்றார்.

Related Articles

Latest Articles