கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச ஆகியோரைவிட ரணில் விக்கிரமசிங்க நாட்டை சிறப்பாக ஆள்கின்றார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதிக்கும், எனக்கும் இடையில் உறவு உள்ளது.
அவர்தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார். முன்னாள் தலைவர் என்ற வகையில் எமக்கு உறவு உள்ளது. ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை முழுமையாக பாராட்ட முடியாவிட்டாலும் ஓரளவு சிறப்பாக உள்ளது.
அடிதட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியிடம் இருந்து தீர்வு வருவதில்லை. அதேபோல ஜனாதிபதியின் சில திட்டங்கள் தொடர்பிலும் விமர்சனங்கள் உள்ளன. ஆனால் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்சவைவிடவும் ஜனாதிபதி சிறப்பாக செயற்படுகின்றார். வேலைத்திட்டங்கள் ஓரளவு சிறப்பாக உள்ளன. குறைகளை நாம் சுட்டிக்காட்டுவோம்.
கோட்டாபய ராஜபக்ச நாசமாக்கிய நாட்டை ரணில் விக்கிரமசிங்க இந்தளவுக்கு கொண்டுவந்துள்ளதையும் பாராட்ட வேண்டும்.நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய ஆளுமை ரணில், சஜித் ஆகிய இருவருக்கும் உள்ளது. ” – என்றார்.