ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று(09) இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டவுடன் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.

Related Articles

Latest Articles