ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி- சாரதி உயிரிழப்பு

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதியான பொத்தேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மீரிகம-விஜயரஜதஹன ரயில்  கடவையில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles