ஹட்டன், மல்லியப்பு பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மஸ்கெலியா, சாமிமலை பகுதியைச் சேர்ந்த சிவனு கன்னியப்பன் (வயது – 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலே மோதியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.