இலங்கையில் தற்போது தங்கியுள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு பிரஜைகளுக்கான விசா காலத்தில் இரு மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

11 ஆயிரத்து 463 ரஷ்யர்களும், 3 ஆயிரத்து 993 உக்ரைனியர்களும் இலங்கையில் தற்போது சுற்றுலாப் பயணிகளாக தங்கியுள்ளனர். இவர்களுக்கான விசா காலமே நீடிக்கப்பட்டுள்ளது.










