ரஷ்யா, உக்ரைன் போரால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியும் பாதிக்கக்கூடும். எனவே, அத்துறையில் தொழில் புரியும் ஊழியர்களுக்கான உரிய வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ரஷ்யா, உக்ரைன் போரால் தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்துறையில் தொழில் புரிகின்ற தொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே, தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசு நேரில் தலையிட்டு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.” – என்றார் கூட்டமைப்பு எம்.பி. சார்ள்ஸ்.
