ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவ பீட மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று வெலிசர நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
அதன்போது, 2,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 500,000 ரூபா சரீரப் பிணையிலும் அவர்களை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்ட மருத்துவ பீட மாணவனை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க டி சில்வா இன்று உத்தரவிட்டுள்ளார்.
நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு வருகை தந்த நீதவான் சந்தேக நபரை பரிசோதித்ததன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பித்தார்.
