ராகம மருத்துவ பீட சம்பவம்-9 பேருக்கு பிணை

ராகம மருத்துவ பீட மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராகம மருத்து பீட மாணவர் விடுதி வளாகத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினரால் கடந்த முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அப்பீடத்தின் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ராகம பொலிஸார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் என 9 பேரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதனையடுத்து. சந்தேக நபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles