ராகலையில் பஸ், லொறி விபத்து: ஒருவர் படுகாயம்!

ராகலையில் பஸ், லொறி விபத்து: ஒருவர் படுகாயம்!

நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியில் ராகலை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் பகுதியில் கெப் ரக வாகனமொன்றும் , தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (20) விபத்துக்குள்ளாகின.

விபத்தில் பலத்த காயமடைந்த கெப் ரக வாகனத்தின் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் , அதே திசையில் பயணித்த பேருந்து ஒன்றை முந்தி செல்வதற்கு முயற்சித்த போது நுவரெலியாவிலிருந்து ராகலை நோக்கி எதிர் திசையில் பயணித்த தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் தனியார் பேருந்தும், கெப் ரக வாகனமும் சேதமடைந்துள்ளன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வீ. தீபன்ராஜ்

Related Articles

Latest Articles