ராகலை தீ விபத்து – வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

ஐந்து உயிர்களை காவு கொண்ட இராகலை தீ விபத்து சம்பவம் தொடர்பான ஐந்தாவது வழக்கு விசாரணை (06) காலை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வலப்பனை நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ். ஜினதாச இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இதன்போது மேற்படி சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பதுளை சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தில் உயிர் தப்பிய தங்கையா இரவீந்திரன் (வயது 27) நீதி மன்றத்தில் ஐந்தாவது முறையாகவும் ஆஜர் படுத்தப்படவில்லை.

அதே நேரத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சந்தேக நபரை பதுளையிலிருந்து அழைத்து வர முடியாத நிலையினை சிறைச்சாலை அதிகாரிகள் இம்முறையும் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

இந்த நிலையில் நீதவான் சந்தேக நபருடன் ஸ்கைப் மூலமாகவே வழக்கு விசாரணையை நடத்தினார்.

ஐந்து உயிர்களை காவுக்கொண்ட இந்த தீப்பிடிப்பு சம்பவம் இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை தோட்டம் இலக்கம் ஒன்று மத்திய பிரிவு தோட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் (07.10.2021) அன்று இரவு இடம்பெற்றது.

இந்த விபத்து சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் தீயில் கருகி உயிரிழந்திருந்தனர்.

சம்பவம் இடம்பெற்ற சமயத்தில் மதுபோதையில் இருந்த குறித்த குடும்பத்தை சேர்ந்த தங்கையை இரவீந்திரன் வயது (27) என்பவர் உயிர் தப்பியிருந்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles