ராஜபக்சக்களின் காவலனே ரணில் – சஜித் அணி எம்.பி. குற்றச்சாட்டு

மத்திய வங்கியில் நிதி இருப்பதாகவும் இதனால் பிரச்சினைகள் இல்லை எனவும் ரணில் கூறுவதாக தெரிவிக்கும்எதிர்க்கட்சி பாராளுமன்ற
உறுப்பினர் சமிந்த விஜேசிறி, மஹிந்த ஓடியொளிந்ததைவிட பெரிய இடம்மொன்றில் ரணிலும் ஓடியொளிய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்,

” குழுக்களை அமைத்து காலத்தைக் கடுத்துவதே பிரதமர் ரணிலின் வழக்கமான செயல். தற்போதும் அதனையே செய்துகொண்டிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான
போட்டியால் ஏற்பட்ட பொருளாதார, அரசியல் நெருக்கடி நிலைமைகளை மக்கள் அனுபவிக்கிறார்கள்.

நாமல் எம்.பியின் எதிர்கால கனவை நிறைவேற்றுவதற்கான வேலைகளையே ரணில்
செய்கிறார். இதனை விடுத்து பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்துள்ள நாட்டை
ரணிலால் காப்பாற்ற முடியாது எனவும் தெரிவித்தார்.

மே 9ஆம் திகதிக்குப் பின்னர் ராஜபக்‌ஷர்களுக்கு பயம் ஏற்பட்டிருந்தது. எனினும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்று அந்த பயத்தை போக்கியுள்ளார். ” – என்றார்.

Related Articles

Latest Articles