‘ராஜபக்சக்களை காப்பது ரணிலின் பணி அல்ல’ – மஹிந்தவுக்கு ஐ.தே.க. பதிலடி!

” நாட்டை மீட்கவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார், மாறாக ராஜபக்சக்களை பாதுகாப்பதற்கு அல்ல.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க தற்போது தங்களின் வழிக்கு வந்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” ஆட்சியாளர்களால் வெளியில் தலைகாட்ட முடியாமல் இருந்தது. அந்நிலைமையை ரணில் விக்கிரமசிங்கவே மாற்றியமைத்தார். தவறான வழியில் பயணித்த அரசியல்வாதிகளுக்கே அவரே புனர்வாழ்வளித்தார். மாறாக ராஜபக்சக்களை பாதுகாப்பது அவரின் நோக்கம் அல்ல. எனவே, வாயை மூடிக்கொண்டு பயணிப்பது சிறந்தது.” – எனவும் ரங்கே பண்டார குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles