‘ராஜபக்ச அரசை விரட்டுவோம்’ – நுகேகொடை கூட்டத்தில் அநுர சூளுரை!

” தம்மால் முடியாது என்பதை இந்த ஆட்சியாளர்கள் எல்லா விதத்திலும் நிரூபித்துவிட்டதால், வீட்டுக்கு செல்லுங்கள் என நாட்டு மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே, இந்த ராஜபக்ச ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கு நாமும் தயார். “

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் அரச எதிர்ப்பு பேரணியும், போராட்டமும் இன்று மாலை நுகேகொடையில் இடம்பெற்றது.

தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊழல் மோசடிகளுக்கு எதிராகவும், நாட்டில் தலைதூக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியுமே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரமுகர்களும், பெருந்திரளான மக்களும் பங்கேற்றிருந்தனர். இதனால் நுகேகொடை பகுதியில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.

இதில் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி தலைமையில் இன்று சர்வக்கட்சி மாநாடு நடைபெற்றது. நாட்டு வளங்களை கொள்ளையடித்த பஸில், மத்திய வங்கியை கொள்ளையடித்த ரணில், தரகுப்பணம் வழங்கிய கப்ரால் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் என்ன பேச – கலந்துரையாட முடியும்? நாங்கள் சென்றிருந்தால், கோட்டா வீட்டுக்கு செல்லுங்கள் என்பதையே கூறியிருப்போம்.

நிர்வாகக் கட்டமைப்பில் ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடுகின்றன. கடந்த 70 ஆண்டுகளில் நாட்டை சீரழித்துவிட்டனர். முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் ஊழல்கள் பற்றி கருத்துகளை வெளியிட்டுக்கொள்கின்றனர். இதுதான் எமது நாட்டு அரசியல். அவர்கள் இவர்களைப் பற்றியும், இவர்கள் அவர்களைப் பற்றியும் குறைகூறுவது வேடிக்கையாகிவிட்டது.

எனவே, ராஜபக்ச ஆட்சியை விரட்டியடிப்பது மட்டுமல்ல, புதியதொரு கலாச்சாரத்தை உருவாக்கும் பொறுப்பும் எமக்கு உள்ளது. மக்கள் சக்திமூலம் ஆட்சியை விரட்டமுடியும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles