பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளரான கனகரத்தினம் ராஜாமீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக பொகவந்தலாவைப் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
ராஜாவுக்கு தொலைபேசிமூலம் அச்சுறுத்தல் விடுத்தார் எனக் கூறப்படும் நபரின் தொலைபேசி இலக்கத்தை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பக்கட்ட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என்றும், இதன் பின்னணியை கண்டறிவதற்காக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு ஆட்டோவொன்றில் வீடு திரும்புகையிலேயே கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாத குண்டர் குழுவினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த ராஜா உடனடியாக பொகவந்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் மேலதிக வைத்தியசாலைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.