ரூ. 1200 இற்கு அரசு இணங்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 200 ரூபா அடிப்படை சம்பளமாக வழங்குவதற்கான யோசனையை பெருந்தோட்ட நிறுவனங்கள் தம்மிடம் கையளித்துள்ள போதிலும் அதற்கு அரசாங்கம் இன்னும் இணங்கவில்லையென தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனையை தொழிற்சங்கங்களுக்கு வழங்கியுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதியின் பின்னர் இறுதித் தீர்மானத்திற்கு அவர்கள் வரவில்லையாயின், 1350 ரூபா அடிப்படை சம்பளத்துடன் 1700 ரூபாவை சம்பளமாக நிர்ணயித்து இறுதி வர்த்தமானியை வெளியிட வேண்டியேற்படும் என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறினார்.

Related Articles

Latest Articles